சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு - வேல்முருகன் எம்எல்ஏ வாழ்த்து

 
velmurugan velmurugan

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வாகியுள்ள நிலையில் வேல்முருகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.  சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணை பிரதமராக இருந்த இவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.  அதிபர் தேர்தலில் 70. 4 சதவீத வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


velmurugan

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் , சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்னம். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுவரும் அவர் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.