பாமகவுடன் இணைகிறதா தமிழக வாழ்வுரிமைக் கட்சி..?- வேல்முருகன் பரபரப்பு விளக்கம்

 
என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வந்தால்.. மாபெரும் போராட்டம் வெடிக்கும்  - வேல்முருகன் எச்சரிக்கை..  என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வந்தால்.. மாபெரும் போராட்டம் வெடிக்கும்  - வேல்முருகன் எச்சரிக்கை.. 

பாமகவை யார் நினைத்தாலும் உடைக்க முடியாது, ஓரிரு நாட்களில் சமாதானம் ஆகி விடுவார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

வன்னியருக்கான இட ஒதுக்கீட்டை சீட்டுக்காகக் கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ்!”  - வேல்முருகன்! | nakkheeran

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “ பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால் இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் எனது குடும்பமும், எனது சகோதரர்களும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக நாங்கள் உழைத்தோம். ராமதாஸ் எங்களை வழிநடத்தினார்கள். அவர் மூலமாக நான் இரண்டு முறை எம்எல்ஏ பதவியை பெற்றேன். முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமையுடன் நேரடியாக பணியாற்றினேன். தற்போது ராமதாஸ், அன்புமணிக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. அதில் ராமதாஸ் மனம் வருந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டதை கண்ட என் கட்சி நிர்வாகிகள், நானும் எனது சகோதரர்களும் வருத்தம் அடைந்தோம். 

சமூக நீதி தளத்தில் தொடர்ந்து பயணித்து வருவது பாமக அரசியல் கட்சியாகும். இந்த கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சிறு குழப்பம் தீர்வதற்கு நாங்கள் மனதார விரும்புகிறோம். மன வருத்தத்தில் இருந்த ராமதாசை திருமால்வளவன் நேரில் சந்தித்து உங்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம், நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்து வந்துள்ளோம். அவ்வளவுதான் இந்த சந்திப்பு இந்த சந்திப்பின் நோக்கம். அதேபோல் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே நடந்தவை நடந்தபடியாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என தொலைபேசியில் கடந்த காலங்களில் என்ன தொடர்பு கொண்டு பேசினார். ராமதாசின் பெரும் தொகை தொகையை எடுத்துவிட்டும், அன்புமணி சொத்தை எடுத்து வந்து விட்டோம் என என்னை விமர்ச்சித்து பேசப்பட்டது. அவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் ராமதாஸ் தாய் உள்ளத்துடன் எனது சகோதரத்துடன் பேசினார். கடந்த கால கசப்புகளை மறந்து எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கடந்த 25 ஆண்டு காலமாக நம் உழைப்பை சுரண்டி கொண்டார்கள் என்ற ஆதங்கத்தில் ராமதாஸ் , அன்புமணி மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளேன். அதற்கு எல்லாம் மருந்து போடுவது போல் நேற்று ராமதாஸ் சந்திப்பு, அன்புமணி கடந்த காலங்களில் என்னிடம் பேசியது மன நிறைவு ஏற்பட்டு உள்ளது.

பா.ம.க.-வில் இணைய உள்ளதாக வெளியான தகவல்: வேல்முருகன் விளக்கம்- Velmurugan  says Information has emerged that he is going to join the PMK

தற்போது நான் கலங்கமற்றவன். நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் எனக்கு எதுவும் தரவில்லை என தெளிவுபடுத்தி உள்ளதோடு, ஆரோக்கியமான அரசியலுக்கு முன் வகித்துள்ளது. மேலும் கடந்த சில காலங்களாக விமர்சனம் செய்யாமல் தவிர்த்து வருகின்றேன். நான் என் பணியை மேற்கொண்டு வருகின்றேன். எங்களை வளர்த்தவர்களை சந்தித்தார்கள். ஆகையால் வேல்முருகன் பாமகவில் சேருகிறார்கள் என்றும், அன்புமணி ராமதாசுக்கு எதிர்ப்பாக வேல்முருகன் ராமதாசுடன் பயணிக்க உள்ளார் என உண்மைக்கு மாறானவையாகும். மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எனது தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியில் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காகவும் எங்களது போராட்டம் போர் குணத்துடன் கூடிய மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வருகிற செய்திகள் எல்லாம் கற்பனை ஆகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமகவுடன் இணையாது, அந்த பேச்சுக்கு வாய்ப்பில்லை” என்றார்.