வேலுநாச்சியாரின் 282வது பிறந்தநாள் - தலைவர்கள் ட்வீட்!!

 
ttn

சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெயரை பெற்றவரும் , வாள்வீச்சு ,அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் என பல்வேறு போர் கலைகளை  கற்றறிந்தவரும்,  பல மொழிகளில் புலமை பெற்றவரும் சிவகங்கை சீமை மன்னர் பதவியை வகித்தவருமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவருக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன். 

ops

வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்ததோடு, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் மறைந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  என்பதை இந்த தருணத்தில் தருணத்தில் நினைவு கூர்ந்து , இந்திய திரு நாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

ttv

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அறிவுத் திறத்தாலும் ஆற்றல் நிறைந்த போர் உத்திகளாலும் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக திகழ்ந்த சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அந்த வீரத் தமிழச்சியைப் போற்றி வணங்கிடுவோம். பெரும் வலிமையோடு இருந்த வெள்ளையரை அசைக்க முடியாத துணிவு கொண்டு எதிர்த்த இந்தியாவின் முதல் பெண் அரசியான வேலு நாச்சியாரின் வீரமும் தியாகமும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர முழக்கமிட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று. தாய்நாட்டின் உரிமைகளைக் காப்பதும் சொந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதுமே எல்லாவற்றையும் விட முக்கியம் என தன் இன்னுயிரையும் ஈந்த அப்பெருமகனின் தியாகத்தையும், உறுதியையும் போற்றி வணங்கிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.