வேங்கைவயல் சம்பவம்.. களமிறங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி

 
ttn

வேங்கைவயலில் ஒரு நபர் ஆணையம் நேரில்  தனது ஆய்வினை தொடங்கியுள்ளது.

ttn

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மல்த்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில்,  இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில்  ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை தொடங்கியுள்ளது.  ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான குழுவினர் வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tn

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  உள்ளிட்ட 12 அதிகாரிகள் ஆய்வில்  ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ் பி , சி பி சி ஐ டி போலீஸ் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 பேருக்கு நடைபெற இருந்த ரத்த மாதிரி சோதனை வருகின்ற 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.