வேங்கைவயல் சம்பவம் - 4 சிறுவர்களுக்கு இரத்தமாதிரி

 
tn

வேங்கைவயல் விவகாரத்தில்  4 சிறுவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்தமாதிரி எடுக்கப்படுகிறது.

tn

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில்,  இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில்  ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்றது.   இதனிடையே புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி,எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவில் 11 பேரை இந்த வழக்கில் சந்தேகப்படுவதாகவும்,  அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நிலையில் , இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வேங்கைவயல் விவகாரம்

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம்: இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. சோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்தமாதிரி எடுக்கப்படுகிறது

tn

இவ்விவகாரத்தில் ஏற்கனவே 21 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.