வேங்கைவயல் விவகாரம் : 2 பேரிடம் இன்று குரல் பரிசோதனை..

 
வேங்கைவயல் விவகாரம் : 2 பேரிடம் இன்று குரல் பரிசோதனை..

வேங்கைவயல்  மேல்நிலை நீர் திறக்கப்பட்டு நீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட இருவரிடம் இன்று சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில்  மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது.  பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் இந்த  மேல்நிலை நீர் தேக்கத்தோட்டியில்  மர்மநபர்கள்  மனிதக்கழிவை கலந்துள்ளனர்.  கடந்த டிசம்பர் 26ம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இன்று 2 பேருக்கு குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது.  

குடிநீர்

சம்பவம் நடந்த அன்று  whatsapp குழுவில் இந்த தகவலை பகிர்ந்த காவலர் உட்பட இருவருக்கு சென்னையில் உள்ள குரல் மாதிரி ஆய்வகத்தில் இன்று பரிசோதனை நடைபெறுகிறது.  குடிநீரில் மனித கழிவு நடந்த விவகாரத்தில் ஏற்கனவே 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதனையடுத்து  டிஎன்ஏ சோதனைக்காக ரைவில் மருத்துவக்குழு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இதனிடையே விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என சிபிசிஐடி போலீசார் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.