கடலூரில் டிச.11, 12 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு
Dec 8, 2024, 13:40 IST1733645433000
தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.11இல் கனமழை பெய்யும் என்றும், டிச. 12 இல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


