நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்

 
tn

நடிகர் ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 66.

tn

நடிகர் ஆர்.எஸ். சிவாஜியின் 1981 ஆம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் . இதை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, ஜீவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் . குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் பேசிய தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க  என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

tn

சமீபத்தில் இவர் இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார்.  இதை தொடர்ந்து கார்கி  படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.  இந்த சூழலில் உடல் நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ். சிவாஜி இன்று உயிரிழந்த அவரது மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.