ரீ ரிலீஸில் வேட்டையாடும் #VettaiyaduVilaiyadu - ரசிகர்கள் உற்சாகம்

 
வேட்டையாடு விளையாடு

17 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 

கடந்த 2006-ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று ‘வேட்டையாடு விளையாடு’. வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லரில் உருவான இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். டிசிபி ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். சைக்கோ த்ரில்லரில் உருவான இப்படத்தை செவந்த் சேனல் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. இதனிடையே இப்படம் ஜூன் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், இந்த திரைப்படம் கமலா திரையரங்கில் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.  டிஜிட்டல் முறையில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு இந்த திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீசான இந்த திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. கமலா திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.