பர்த் டே பார்ட்டியில் உயிரிழந்த நபர்... வாட்ஸ்அப்பில் பரவிய பகீர் வீடியோ - உண்மை என்ன?

 
birthday cctv video

அண்மையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகீர் வீடியோ ஒன்று வெளியானது. பிறந்தநாள் கொண்டாடும் நபரை அவரின் சக நண்பர்கள் அடித்து உதைத்து கேக் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தான் அது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே நண்பர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடும் நபரை சரமாரியாக அடிப்பார்கள். உதைப்பார்கள். முட்டையைக் கொண்டு தலையில் அடிப்பார்கள். கோக்கை ஊற்றுவார்கள். கேக்கை உடல் முழுவதும் பூசுவார்கள். birthday cctv video

இதேபோல் தான் வீடியோவில் இடம்பெற்றுள்ள அந்த நண்பர்களும் செய்வார்கள். இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போதே பிறந்தநாள் கொண்டாடும் நபர் திடீரென்று மயக்கமடைவார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவானது போல இருக்கும். வீடியோவின் இறுதியில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்கள் எப்போதும் ஒரு சாதாரண வீடியோவுக்கு கூட ஓவராக ஹைப் ஏற்றிவிற்று மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கும். அதுதான் இந்த வீடியோவுக்கும் நிகழ்ந்தது. பிறந்தநாள் கொண்டாடிய அந்த நபர் இறந்துவிட்டதாக கேப்சன் போட்டு வீடியோவை பரப்பிவந்தனர். ஆனால் தற்போது அது உண்மை இல்லை. அது ஒரு விழிப்புணர்வு வீடியோ என்பது தெரியவந்துள்ளது. Hamsa Nandini என்ற பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோவின் ஒரிஜினல் வெர்சன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

29 லட்சம் பாலோவர்களைக் கொண்டுள்ளது அந்த பேஸ்புக் பக்கம். அதில் தான் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த சிசிடிவி வீடியோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கேப்சனில், "இதைப் போல் யாரும் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம். வீடியோவை பார்த்ததற்கு நன்றி. இந்தப் பேஸ்புக் பக்கத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள் மற்றும் ஃபிராங் ஷோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது உண்மை இல்லை. விழிப்புணர்வுக்காக சித்தரிக்கப்பட்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.