சீமான் உள்ளிட்ட யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம்- விஜய்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சமூக வலைதளங்களை முறையாக கையாள வேண்டும், எதிர்க்கட்சியின் விமர்சனங்களை கண்ணியத்தோடு கையாண்டு தக்க பதிலடி தர வேண்டும், தரைக்குறைவான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன்வைக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். சீமான் உள்ளிட்ட யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் யார் விமர்சனம் செய்தாலும் கடந்து செல்லுங்கள் என்றும் கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முக்கிய நோக்கம் என்றும் விஜய் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
தற்போது தவெகவில் உள்ளவர்கள் ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக மாறியவர்கள். ஆகவே கட்சியில் புதிய தொண்டர்களை இணைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது.


