"உங்கள் விஜய் உயிரென வரட்டா" என்ற பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் விஜய்

 
"உங்கள் விஜய் உயிரென வரட்டா" என்ற பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் விஜய் "உங்கள் விஜய் உயிரென வரட்டா" என்ற பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் விஜய்

மதுரை மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார் த.வெ.க. தலைவர் விஜய்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. த.வெ.க தொண்டர்கள் அதிக அளவில் கூடியுள்ள நிலையில், மங்கல இசையுடன் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது.


த.வெ.க தலைவர் விஜய் குரலில், தமன் இசையில் "உங்கள் விஜய் உயிரென வரட்டா" என்கிற பாடல் ஒலிக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்தார் தலைவர் விஜய். மேடை ஏறியவுடன் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த பெற்றோரிடம் விஜய் வாழ்த்து பெற்றார். விஜயை கட்டியணைத்து பெற்றோரும் வரவேற்றனர். பின்னர் மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் விஜய் ரேம்ப் வாக் செய்தார்.