#Vijay எனது அருமை தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் விஜய் !

 
vijay
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கவிருக்கின்றன.
இத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்திணை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்,"தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தனது வாழ்த்தினை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.