கொடியேற்றி ஒத்திகை பார்த்த விஜய்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி 3 விதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடத்தி கட்சிக்கொடியனை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட விஜய் முகம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடி பறந்தது. கட்சிக்கொடி வெளியாகும் முன் மாதிரி கொடி ஒன்றை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்ததாக தெரிகிறது. கொடியின் நிறம் மஞ்சளாகவும் நடுவில் விஜய் படம் இடம் பெற்றும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
#JUSTIN கொடி ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்#Vijay #Actorvijay #TVK #TVKFlag #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/EkiaBM9oI6
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 19, 2024