தவெக எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஜய்!
சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, ‘ “எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்ய வாகனம், தனி உதவியாளர் போன்ற வசதிகளை அரசு செய்துதர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், ‘‘எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்” எனக் கூறினார்.
இந்நிலையில் எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்துள்ள முதல்வர் விஜய், லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிசெய்ய சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வாகியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். நடப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

