நாளை டெல்லியில் ஆஜராகிறார் விஜய்

 
vijay vijay
நாளை டெல்லியில் ஆஜராகிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு ஆறாம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். இதற்காக சென்னையில் இருந்து ஏழு மணிக்கு தனி விமான மூலம் டெல்லி புறப்படுகிறார். 

ஏற்கனவே டெல்லியில் கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகளிடம் 19.30 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளை டெல்லி செல்லும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி விசாரணை முடித்து அன்றைய தினம் மாலை சென்னை திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் டெல்லி செல்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கட்சி சார்பிலும் சிபிஐ தரப்பிலும் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.