சட்டப்பேரவை நடுவே விஜய்- கவனம் ஈர்த்த அலங்கார வளைவு

 
vijay vijay

தவெக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள விடுதியின் நுழைவாயிலில் சட்டப்பேரவை நடுவே விஜய் இருப்பது போன்று வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு நடைபெறம் இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துக்கொள்ள உள்ளார். தவெக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள விடுதியின் நுழைவாயிலில் சட்டப்பேரவை நடுவே விஜய் இருப்பது போன்று வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசிக்க உள்ளார். இந்த செயல்வீர்கள் ஆலோசனை கூட்டத்திற்க்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மாமல்லபுரம் பகுதிக்கு வருகை தருகின்றனர். கூட்டத்திற்க்கு வருகை தரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதி பாஸ் வைத்திருந்தால் மட்டுமே உள்ள அனுமதித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் 3000 பேர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று முன்தினம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது குறிப்பிடதக்கது.

மாமல்லபுரத்தில் நடைபெற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பகுதியில் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.