"அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்"- கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் பேசிய விஜய்
Updated: Oct 7, 2025, 14:01 IST1759825903899
தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசினார்.

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோகாலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவர்களிடம் விஜய் கூறினார். வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார். வீடியோகாலில் பேசியபோது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


