தன்னுடைய ரசிகையை தொகுப்பாளினி ஆக்கிய விஜய்!

 
ச்

விஜய் தன்னுடைய முதல் பிரம்மாண்ட மாநாட்டை தொகுத்து வழங்க தன்னுடைய ரசிகையையே தொகுப்பாளினி ஆக்கியுள்ளார். ஆனால் மாநாட்டில் தொகுப்பாளினி பற்றிய பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.

Image

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  இரவு 7.30 மணிக்கெல்லாம் மாநாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக நிறைவுபெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக இன்று (அக்.28) அதிகாலை 3 மணியாகிவிட்டது.  இந்த மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றிருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.  

இந்நிலையில் விஜய் தன்னுடைய முதல் பிரம்மாண்ட மாநாட்டை தொகுத்து வழங்க தன்னுடைய ரசிகையையே தொகுப்பாளினி ஆக்கியுள்ளார். இப்படிதான் நிகழ்ச்சியை தொகுக்க வேண்டும், இவர்கள்தான் ஆகச்சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்பதையெல்லாம் விஜய் உடைத்தெறிந்துள்ளார். விஜய் கொடுத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி, பிரம்மாண்ட மாநாட்டை தைரியத்துடன், தன்னம்பிக்கையுடன் தொகுத்து வழங்கியுள்ளார் துர்கா தேவி.