லாக் அப் மரணங்கள் - குடும்பங்களை சந்திக்கிறார் விஜய்
Jul 12, 2025, 14:45 IST1752311732000
காவல் நிலையத்தில் விசாரணையின் போது இறந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரடியாக சந்திக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் நிலைய விசாரணை மரணங்கள் நடந்துள்ளனர். காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களில் 21 குடும்பங்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்துள்ளனர். லாக் அப் மரணத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவியும் வழங்குகிறார். மேலும் அவர்களுக்கு சட்ட உதவிகளையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.


