கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்- நாளை வழங்க விஜய் உத்தரவு
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகை நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் வழங்க விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்த விஜய், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் விடுமுறையில் இருந்தன. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் சேகரிக்கப்பட்டு காசோலையா வழங்குவதா அல்லது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதா என்ற பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஓரிரு நாட்களில் நிவாரணத் தொகையை வழங்க விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் அல்லது தவெக நிர்வாகிகள் நேரில் சென்று நிதியுதவி அளிக்க முடிவு செயப்பட்டுள்ளது. முதலில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கும் இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


