தோல்வியே காணாத வாகை நாயகர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தை போற்றுவோம் - விஜய்

 
vijay vijay

பெரும்பிடுகு முத்தரையர் தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம் என தமிழக வெற்றி கழகத்தின் விஜய் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்  அவர்கள். தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். 

அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம் என குறிப்பிட்டுள்ளார்.