கொடைக்கானலில் 3வது நாளாக விஜய் ரோடு ஷோ

 
ச் ச்

படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றுள்ள நடிகர் விஜய், அங்கு 3வது நாளாக ரோடு ஷோ நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யின் 69 வது படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி கொடைக்கானலுக்கு வந்தார். இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். காலையில் படப்பிடிப்புக்காக மலைப்பகுதி மேல் சென்ற விஜய் படப்பிடிப்பு முடிந்த பிறகு மாலையில் தனியார் விடுதிக்கு திரும்பும் வழியில் தாண்டிக்குடி கிராமத்தை கடந்து செல்லும்போது தாண்டி குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தாண்டிக்குடி கிராமத்தில் விஜயை காண்பதற்காக முகாமிட்டிருந்தனர். பெரும் ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு விஜய் சுவாரசிய சந்திப்பை பரிசாக அளித்தார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காத்திருந்த மக்களை காண்பதற்காக தன்னுடைய காரை தவிர்த்து விட்டு திறந்த வெளி வாகனத்தில் விஜய் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமம் முழுக்க விஜய் திறந்த வெளி வாகனத்திலேயே பயணம் செய்து அங்கிருக்க கூடிய மக்களிடம் ரோஜா உள்ளிட்ட மலர்களை வாங்கி சென்று மக்களுடன் கைகுலுக்கி தனியார் விடுதிக்கு சென்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.