விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை- பொதுக்கூட்டம் நடத்த டிஐஜி அறிவுரை

 
vijay vijay

புதுச்சேரியில், விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி இல்லை, திறந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம் என புதுச்சேரி  டிஐஜி சத்திய சுந்தரம் பேட்டியளித்துள்ளார்.

vijay

தவெக தலைவர் விஜய், கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசும் விதிமுறைகளை வகுத்து கோர்ட்டில் சமர்பித்துள்ளது. இவ்வழக்கில் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு வழங்காததால் நிலுவையில் உள்ளது. இதனால் சமீபத்தில் தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இருப்பினும், தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுவையில் வரும் 5ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி புதுவை காவல்துறை ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி தருவது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐஜி அஜித்குமார் சிங்கிளா, உயரதிகாரிகள் மற்றும் தவெக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி 
டிஐஜி சத்திய சுந்தரம், புதுச்சேரியில், விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி இல்லை, திறந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம் எனக் கூறினார்.