தவெக சோசியல் மீடியா படை, இந்தியாவிலேயே மிகப்பெரிய படை - விஜய் பேச்சு

 
vijay vijay

தமிழக வெற்றி கழகத்தின் சோசியல் மீடியா படை, இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார். 

தமிழக வெற்றி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயின் வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் பேசிய விஜய், எல்லாரும் எப்படி இருக்கீங்க. இந்த மீட் நடக்கும் போதே, Zoom கால் ல வந்து பேச வேண்டும் என்பது என்னோட விருப்பம். நெட்வொர்க் பிரச்சனையால வர முடியல. அதனால தான் வீடியோ பதிவு. இந்த ரெக்கார்ட் வீடியோ மூலமா உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.


நம்முடைய சோசியல் மீடியா படை, இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கின்றனர். இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் அல்ல. என்னைப் பொருத்தவரை நீங்கள் கட்சியின் Virtual Warriors. நம்ம I.T. wing ஒழுக்கமான, கண்ணியமான ஐடி விங் என்று எல்லோரும் சொல்ல வேண்டும். அதனை மனதில் வைத்து எல்லாரும் செயல்படுங்கள். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம், நன்றி! என கூறினார்.