இன்று திருப்பூரில் விஜய் ரோடு ஷோ மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி..! அதுவும் கடைசி நேரத்தில்... கொந்தளிப்பில் தொண்டர்கள்..!

 
1

தர்மபுரியில், ஆட்டுகாரம்பட்டி அருகே, த.வெ.க., தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள, தர்மபுரி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., காயத்ரி அனுமதி வழங்கினார். அதில், பப்பிநாயக்கனஹள்ளி பஞ்சாயத்தில் அனுமதி வழங்கிய 4.5 ஏக்கர் பரப்பு இடத்தில், காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை பிரசாரம் செய்து கொள்ளலாம் எனவும் மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியின், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலர் சிவன் கூறியதாவது:விஜய் பிரசாரத்துக்காக, ஏப்., 9ம் தேதியே, தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கோரினோம். ஆனால், ஏப்., 13 இரவு, முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி வந்து, மறுநாள் ஏப்., 14 அன்று நடைபயணம் மற்றும் காரிமங்கலத்தில் பிரசாரம் மேற்கொள்வதால், ஏப்., 16க்கு பிறகு பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.இதனால், அடுத்தகட்ட ஏற்பாடுகளை செய்து வந்தபோது, முதல்வர் நிகழ்ச்சி தேதி மாறி விட்டது, நீங்கள், ஏப்.14ல் 'ரோடு ஷோ' நடத்திக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர். திடீரென 24 மணி நேரத்திற்கு முன் தெரிவித்தால், எப்படி ஏற்பாடு செய்ய முடியும், விஜய் பிரசாரத்தை முடக்க, அதிகாரிகள் சதி செய்கின்றனர். திருப்பூரில் இன்று விஜய் பிரசாரம் செய்வதால், ஏப்., 16 அல்லது ஏப்., 17ல் அனுமதி கேட்க, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை நாளான இன்று (ஏப். 14) திருப்பூர் மாவட்டத்தில் விஜய்யின் சாலைவலம் மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் இன்று த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அவிநாசி முதல் பெருமாநல்லுார் வரை த.வெ.க தலைவர் விஜய் இன்று மதியம் 3:00 மணிக்கு ரோடு ஷோவில் பங்கேற்கிறார். திருப்பூர் மாநகரப் பகுதிகளிலும் பங்கேற்க உள்ளார். த.வெ.க தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை விஜய் சாலைவலமாகச் செல்லவுள்ளார்.