அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்
Aug 30, 2025, 12:46 IST1756538212138
அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய்.

முதற்கட்ட சுற்றுப்பயணம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் தவெக தலைமை ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து பனையூரில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், அனுமதி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.


