யாருக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது?- விஜயபாஸ்கர்

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க, நீட் ஒழிப்புக்கான இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்போம், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக  வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்! | Aiadmk Ex Minister Vijayabaskar against  income tax department ...

இந்நிலையில் நீட் தேர்வு ரத்துக்கான திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்க கோரி அழைக்கப்பட்டதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் என திமுக நாடகம் நடத்தும் நிலையில் அதிமுக எப்படி பங்கேற்க முடியும்? யாருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்? நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்திட்ட காங்கிரசை எதிர்த்தா? அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தா? என முதலமைச்சர் விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு என்பது விஷவிதை என்றால் அதை விதைத்தது காங்கிரஸ். ஜல்லிக்கட்டுக்கு பாதகம் செய்ததும், நீட் தேர்வில் பாதகம் செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். 

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தினாலும் பாதிப்பை குறைக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.  நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் 38 திமுக எம்பிகளும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. நீட் தேர்வை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் திமுக கையெழுத்து வாங்குமா? என்பதை விளக்க வேண்டும்” என்றார்.