#Breaking பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி

 
tn

விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். 

tn

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி  பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. பிள்ளை பிடிக்கும் பா.ஜ.க., யார் யாரெல்லாம் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா என்று வலை வீசுவார்கள். ஆனால், அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி சென்றிருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார். 

tn

இந்நிலையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.