"விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு" - விஜயதரணி
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழர் அல்ல என கூறும் சீமான் தன்னுடைய பாரம்பரியத்தை சொல்ல வேண்டும் என பாஜக நிர்வாகி விஜயதரணி தெரிவித்துள்ளார்.
.
இதுதொடர்பாக பாஜக நிர்வாகி விஜயதரணி அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் எம்.பி சீட் கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் குமரியில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எம்.பி.சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பாஜகவில் பொறுப்பு தர சில காலம் பொறுக்க வேண்டுமென்ற தமிழிசையின் அறிவுரை ஏற்கிறேன்.
ராகுல்காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. நான் காங்கிரஸில் இருந்தபோது டெல்லியில் நடிகர் விஜயிடம் கட்சி தொடங்க வேண்டும் என ராகுல் கூறினார். நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டார்; உங்கள் செல்வாக்கிற்கு
தனிக் கட்சியே தொடங்கலாம் என ஐடியா கொடுத்தவர் ராகுல் காந்தி. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் முதலில் என் பெயர் இருந்தது; பொன் ராதாகிருஷ்ணன் பிடிவாதமாக இருந்ததால் நான் போட்டியிட முடியாமல் போனது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழர் அல்ல என கூறும் சீமான் தன்னுடைய பாரம்பரியத்தை சொல்ல வேண்டும் ” என்றார்.