கேப்டன் விஜயகாந்த்துக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ், சசிகலா

 
vijayakanth

நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

“Vijayakanth is completely stable and is expected to recover fully and should be ready for discharge soon.” – Medical bulletin from MIOT hospital
 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது 71-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனதருமை நண்பரும், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த்  அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! விஜயகாந்த் அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கட்பணியாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


அதேபோல் சசிகலா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள் தனது எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தனது கடின உழைப்பால், ஒரு நடிகராக தனது வாழ்க்கைப்பயணத்தை தொடங்கி, தமிழகசட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவராக, மக்கள் நலப்பணிகளை ஆற்றிய தங்களின் சமூகப்பணி எந்நாளும் தொடர்ந்திடவும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , இன்று 70ஆவது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர்  விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.