தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 
vijayakanth

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும்,  சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும்  விஜயகாந்த் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு  எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“Vijayakanth is completely stable and is expected to recover fully and should be ready for discharge soon.” – Medical bulletin from MIOT hospital

இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   



தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.  உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம்.  நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை  கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.