விஜயகாந்த் உடல் அடக்கம்- 200 உறவினர்களுக்கு மட்டும் அனுமதி

 
குழி

விஜயகாந்த் நல்லடக்கம் செய்யும்போது தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில்  வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image

இந்நிலையில் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்காக எல்.இ.டி.திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திவருகின்றனர்.