நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர்? விஷால் பேட்டி!!

 
vishal

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வ ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தினமும் ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

vijayakanthஇந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், நடிகர் சங்க கட்டடத்தை இந்த வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம்; இந்த வாரத்தில் அதற்கு அடிக்கல் நாட்ட உள்ளோம்; நடிகர் சங்க கட்டடத்திற்கு ‘கேப்டன்' விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

vishal 34முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.