முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விஜய பிரபாகரன் சந்திப்பு!

 
stalin stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், விஜய பிரபாகரன் சந்தித்து விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், விஜய பிரபாகரன் சந்தித்து விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நேரில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் அழைப்பு விடுத்தனர். நினைவு தினத்தன்று ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணி நடத்த தேமுதிக திட்டமிட்டுள்ளது.விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக அறிவித்துள்ளோம் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நினைவு தின பேரணியில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.