விஜய் பிறந்தநாளுக்கு வைத்த பேனர் கிழிப்பு..!! தவெக மற்றும் திமுகவினர் மோதலில் இருவருக்கு மண்டை உடைப்பு..!!

 
விஜய் பிறந்தநாளுக்கு வைத்த பேனர் கிழிப்பு..!!  தவெக மற்றும் திமுகவினர் மோதலில் இருவருக்கு மண்டை உடைப்பு..!! விஜய் பிறந்தநாளுக்கு வைத்த பேனர் கிழிப்பு..!!  தவெக மற்றும் திமுகவினர் மோதலில் இருவருக்கு மண்டை உடைப்பு..!!

உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியில் விஜய்-யின் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் தவெக மற்றும் திமுக-வினரிடையே மோதல் ஏற்பட்டது.  

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெடிலும் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஜெயமனி(31), சரவணன் (38), செந்தில்முருகன்(38) ஆகியோர் பேனர் வைத்துள்ளனர். அந்த இடத்தில் திமுகவினர் பேனர் வைக்கக் கூடாது என கூறி எச்சரிக்கிறதாக சொல்லப்படுகிறது. அதனையும் மீறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். நள்ளிரவில் அவர்கள் வைத்த அந்த பேனரை திமுக-வினர் கிழித்தாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக மற்றும் த.வெ.கவினரிடையே  நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி

இந்த மோதலில் திமுகவைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சேர்ந்து இவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சரவணன் மற்றும் ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்தது.  இருவரும்  இரத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் நள்ளிரவில் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரிஷிமந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.