’சர்க்கார்’ பட பாணியில் விஜய் வகுக்கும் வியூகம்.. தவெகவில் இணையும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி..!!

 
’சர்க்கார்’ பட பாணியில் விஜய் வகுக்கும் வியூகம்.. தவெகவில் இணையும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி..!! ’சர்க்கார்’ பட பாணியில் விஜய் வகுக்கும் வியூகம்.. தவெகவில் இணையும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக் இணைகிறார். 

2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய், அதற்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.    கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை வளைத்து போட்டு வருகிறார். அந்தவகையில்  சர்க்கார் திரைப்பட பாணியில் தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,  அதிகாரிகளை கட்சிக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.  

vijay
 
ஏற்கனவே பிரபல பேச்சாளரான ராஜ்மோகன், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா,  பாஜக - அதிமுகவில்  இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தவெகவிற்கு வந்துவிட்டனர். இதந்தொடர்ச்சியாக ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ், இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அடிப்படையில் மருத்துவரான அருண்ராஜ், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார்.  இந்திய வருமான வரித்துறையில் பணியில் உள்ள அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல்  தமிழகத்தில் பணியாற்றி வந்தார். பின்னர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண்ராஜ்,  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியநிலையில் அந்த ராஜினாமா மத்திய அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Image

இதனிடயே  தான் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய இருப்பதாகவும்,  இணை பொது செயலாளர், துணை பொது செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே அவர் தவெக தலைவர் விஜய்க்கு, ரகசிய ஆலோசகராக செயல்பட்டு வருவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.   இந்நிலையில்  இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார். இவர்தவிர மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான  ராஜலட்சுமி,  அதிமுக வால்பாறை முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன், ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையின் மரிய வில்சன் ஆகியோரும் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.