மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் விஜய் வாகனம்..!

 
Q Q

தவெக தலைவர் விஜய், தனது முதல் மக்கள் சந்திப்புப் பயணத்தை இன்று திருச்சியில் துவக்கினார். இதனால், திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

விமான நிலையத்திலிருந்து மரக்கடை பிரச்சார இடம் வரை ரசிகர்கள் திரண்டிருப்பதால் விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை பகுதியை விஜய் நெருங்கும் நிலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்து வருகிறது.

திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தடைந்துள்ளார். திருச்சி விமானநிலையத்திலிருந்து சுமார் 4 மணிநேர பயணத்திற்குப் பின் விஜய் வந்தடைந்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, கணிசமான வாக்குகளை பெரும் விஜயால் தி.மு.க-வின் வெற்றிக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது. தி.மு.க கூட்டணி கட்சிகள் அணி மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை” என்றார்.