இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: விஜயபாஸ்கர்

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமை பார்வையிட சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். 

கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் ஏன் சொன்னார்?- அமைச்சர் விஜயபாஸ்கர்  விளக்கம் | Why did the Chief Minister say that God knows? - Minister  Vijayabaskar explained - hindutamil.in

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “பொதுவாக பெரும் வெள்ள காலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து உள்ள நேரங்களிலும் நோய் தொற்று ஏற்படுவது என்பது தவிற்க முடியாத நீதி, தற்போது சென்னையில் தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால்  பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, தற்போது சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கு க்ளோரினேசன் செய்ய வேண்டும், ஆனால் அங்கு க்ளோரினேசன் செய்யவில்லை,  க்ளோரினேசன் செய்யாத தண்ணீரை பொதுமக்கள் அருந்தும்போது அவர்களுக்கு டயரியா போன்ற நோய்கள் வரும்.

புயல் பாதிப்புக்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை, பணிகளை முடிக்கிவிடவில்லை, அரசு இயந்திரம் முடங்கிப்போயுள்ளது. மக்கள் கோபத்தை 6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது. இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர் கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான்,ஆனால் திமுக அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது, தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது, சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை, எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நீதி, அதனை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும் ஆனால் எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும், இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை” என்றார்.