விளவங்கோடு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
election election

விளவங்கோடு  சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் அவர் ராஜினாமா செய்தார்.  இதனிடையே  வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  அதோடு காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

election commision

 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர் . விளவங்கோடு  இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டியிடுகிறார் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் ராணி, காங்கிரஸ் சார்பில்  தாரகை களமிறக்கப்பட்டுள்ளனர். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 

election

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.