அண்ணாமலை தலைமையில் திருமண விழா - விழுப்புரம் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!!

 
edappadi palanisamy edappadi palanisamy

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

th

அண்ணாமலையின் 39வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரத்தில் நேற்று 39 திருமண ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடத்தினார் முரளி. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. முரளி (எ) ரகுராமன், (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)

rn

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.