திண்டுக்கல்லில் தடையை மீறி வைத்த விநாயகர் சிலை அகற்றம்

 
விநாயகர்

திண்டுக்கல்லில் போலீஸ் தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்த இந்து முன்னணியை  சேர்ந்த பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல்  வழியாக தாரை தப்பட்டை அடித்து விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல இஸ்லாமியர்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக  குடைபாறைப்பட்டியில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய  காவல்துறையினர் அனுமதி மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் இன்று 18.09.23 விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்துமுன்னணி சார்பில் தடையை மீறி குடைப்பாறைபட்டியில் உள்ள  காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்பொழுது தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்ததாக கூறி காவல்துறையினர் சிலையை கைப்பற்றி எடுத்துச் சென்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கரைந்தனர். மேலும் தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்தாக   கூறி இந்துமுன்னணி யினர் மற்றும்  பெண்கள் உட்பட 38 பேரை போலிசார் கைது செய்தனர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.