சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு..

 
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு.. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு..

 சென்னையில் உள்ள 4  கடற்கரைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. 

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு..

நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி  விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். குறிப்பாக சென்னைகள் பல்வேறு பகுதிகளில் 1,524 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை முழுவதும் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு   சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று  சென்னை உள்படபல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு..

 சென்னையில் உள்ள நான்கு கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் வைத்து சிலைகள்  ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கும் பணியை நடைபெற்று வருகிறது.   அந்த வகையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 1,220 சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  காலை முதலே விநாயகர் சிலைகளை பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கரைத்து வருகின்றனர். 

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் க்ரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு..

 இங்கு சிறிய சிலைகள், 7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் மற்றும் 7 அடி உயரத்திற்கு மேல் உள்ள சிலைகள் என மூன்று வகைகளாக விநாயகர் சிலைகள் பிரிக்கப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.   7 அடிக்கும் மேல் உள்ள ராட்சத விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் கடலில்  கரைக்கப்பட்டு வருகின்றன. சிலைகள் கரைக்கப்பட்டு வருவதை ஒட்டி  உயர் கோபுர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு,  சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  ▪️ 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்