மத்திய அமைச்சர்களுடன் வினோஜ் பி செல்வம் திடீர் சந்திப்பு

 
tn

சமீபத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தார். அப்போது மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

tn

இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தார்.


அப்போது  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கோரிக்கை விடுத்தார். 


அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்த அவர், சென்னையில் யானை கவுனி பாலத்தை கட்டி முடிக்கவும், சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு ரயில் இணைப்புகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.