தமிழகத்தையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி வழக்கில் நடந்த விதிமீறல்கள் - 7 பேர் சஸ்பெண்ட்

 
pll

தமிழகத்தையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நடந்த விதிமீறல்கள் காரணமாக எஸ்ஐ உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் , மணிவண்ணன்,  சபரிராஜன் ஆகியோரை கடந்த 20. 10. 2021 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பி வரும்போது,   வரும்வழியில் விதிமுறைகளை மீறி கைதிகளை அவர்களின் உறவினர்களை சந்திக்க  அனுமதித்துள்ளனர்.

plll

 இந்த அதிர்ச்சி சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு ,வசந்தகுமார், சதீஷ் ,மணிவண்ணன், சபரிராஜன் ஆகியோர் உறவினர்களை சந்தித்தது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை அடுத்து சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்,   காவலர்கள் பிரபு, ராஜ் குமார், ராஜேஷ் குமார், கார்த்தி, நடராஜன் ஆகிய ஏழு பேரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.  இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

po

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறையில் இருப்பவர்களை உறவினர்களுடன் சந்திக்க வைத்து விதிமுறைகள் மீறப்பட்டதும் அது வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனதும்,  அதற்கு காரணமானவர்களை 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.