விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!!

 
TN

விருதுநகரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

விருதுநகரில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருப்பதை வீடியோவாக  எடுத்துள்ளார். அத்துடன் திமுக இளைஞரணிஅமைப்பாளர் ஜுனைத் மற்றும்  இருவரும் , நான்கு பள்ளி மாணவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

mk stalin

இதனிடையே திமுக நிர்வாகிகள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.  இந்த விவகாரம் குறித்து தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

TN

 இது குறித்து பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், " விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட என்ற செய்தி வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  4 பேர் நீதிமன்றத்தில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கை ஒரு மாடல் வழக்காக நேரடியாக கண்காணித்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளேன்.  அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொள்ளாச்சி  வழக்கு , வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போன்று இல்லாமல் இந்தியாவிற்கே இந்த மாநிலம் முன்னோடியாக இருந்து இந்த வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்றுத் தரும். விருதுநகர் பாலியல் குற்ற சம்பவத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என்று உறுதிபடக் கூறினார். 

TN

இந்நிலையில் விருதுநகரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. விசாரணை அதிகாரியான எஸ்.பி. முத்தரசி விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.