இயக்குனராக மாஸ் காட்டும் விஷால்…. ‘மகுடம்’ பட அப்டேட்!

 
1 1

விஷால், ‘ஈட்டி’ படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் தனது 35 வது படமான மகுடம் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டது. ஆனால் இயக்குனருக்கும், விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘மகுடம்’ திரைப்படத்தின் இயக்குனர் பொறுப்பை விஷால் கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த தீபாவளி தினத்தன்று அறிவிப்பு வெளியான நிலையில், விஷால், ‘மகுடம்’ படத்தை எப்படி இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டிவிடுகிறது.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் 100 ஸ்டண்ட் மாஸ்டர்களுடன், 800 படக்குழுவினருடன் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது 17 நாட்கள் இடைவிடாமல் ‘மகுடம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியுள்ளதாக மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.