வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் தவெக புறக்கணிப்பு

 
அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம் அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம்

டெல்லியில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.

election commision

அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் டெல்லியில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில  கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்படவுள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிகளா திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.