"வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்" - கவிஞர் வைரமுத்து
மக்களவை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
விரலில் வைத்த கருப்புமை
— வைரமுத்து (@Vairamuthu) April 18, 2024
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்#Elections2024
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
என்று பதிவிட்டுள்ளார்.


