பள்ளிகளில் நடைமுறைக்கு வந்தது ‘வாட்டர் பெல்’ திட்டம்..
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க வாட்டர் பெல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணிக்கு மற்றும் மாலை 3 மணிக்கு என 3 வேளைகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன்படி மாணவர்கள் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறாமல், வகுப்புச் சூழலுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு உள்ளேயே தண்ணீர் அருந்த வேண்டும். ஆகையால் மாணவர்கள் கட்டாயல் தண்ணீர் பாட்டில்களை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிவுறுத்தலின் படி இந்தத் திட்டம் இன்றும் முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் நீரிழப்பு ஏற்படும் எனவும், அவ்வாறு நீரிழப்பு ஏற்படும் மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும் என்றும், மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளை தரும் என்பதாலும் பள்ளிக்கல்வித்துறை இந்த ‘வாட்டர் பெல்’ திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


